Thursday, April 11, 2024

புதிய அப்டேட் கொடுத்த லியோ படக்குழு…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் ‘லியோ’ படதின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. படம்குறித்து பல்வேறு அப்டேட்கள் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டு இருக்கின்றன.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டாக புதிய வீடியோ ஒன்ற படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ‘லியோ’ படக்குழுவினரை நடிகர் சஞ்சய் தத் சந்தித்த வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

- Advertisement -

Read more

Local News