Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

இந்தியன் பனோரமாவி்ல் திரையிடப்பட இருக்கும் ‘குரங்கு பெடல்’..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குரங்கு பெடல்’ திரைப்படம் இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையிலும் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமாவில் திரையிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மதுபான கடை’,  ‘வட்டம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநரான கமலக்கண்ணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

மாண்டேஜ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

எஸ்.ஆர்.ஜெ. புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சஞ்சய் ஜெயக்குமார் மற்றும் கத கேளு எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்துள்ளன.

எழுத்தாளரும், இயக்குநருமான ராசி அழகப்பனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பிரபாகர் சண்முகம் மற்றும் கமலக்கண்ணன் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

படத்தில் காளி வெங்கட் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உயிரோட்டமான பாடல்கள் மற்றும் சிறப்பான பிண்ணனி இசையின் மூலம் மக்களை கவர்ந்த ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். ஜிப்ரானின் பிண்ணனி இசை, மற்றும் பாடல்கள் இப்படத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருக்கிறது.

இயக்குநர் பிரம்மா, என்.டி.ராஜ்குமார் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.

காலா’, ‘பரியேறும் பெருமாள்’, ‘சார்பட்டா பரம்பரை’,  குதிரை வால்’, ‘ஜல்சா’(ஹிந்தி) ஆகிய படங்களுக்கு ஒலிக்கலவை செய்த அந்தோணி பி.ஜெ.ரூபனின் ஒலிக் கலவை இந்தப் படத்தை உலகத் தரத்துக்கு கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

தீரன் அதிகாரம் ஒன்று’, ‘டெடி’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘வட்டம்’ ஆகிய படங்களுக்கு படத் தொகுப்பு செய்த சிவா நந்தீஸ்வரனின் மிக நேர்த்தியான படத் தொகுப்பு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

சுமீ பாஸ்கரன் தனது சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் இயக்குநரின் கற்பனையை அப்படியே திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

வெந்து தணிந்தது காடு’, ‘ஜெய் பீம்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘சாணிக்காயிதம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களுக்கு வண்ணக்கலவை செய்த பாலாஜி கோபால் இத்திரைப்படத்துக்கும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்.

1980-களின் காலக்கட்டத்தில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் காவேரிக் கரையோர பகுதிகளை களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கத்தேரி’ என்கிற கிராமத்தில் சைக்கிள் ஓட்டத் தெரியாத ஒரு தகப்பனுக்கும், சைக்கிள் ஓட்டிப் பழகுவதில் ஆர்வமாக இருக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான கதையை இத்திரைப்படம் விவரிக்கிறது.

- Advertisement -

Read more

Local News