ஜீ5 தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லரை இன்று வெளியிட்டது.
இந்த டாக்குமெண்டரி சீரிஸின் டைட்டில் மற்றும் டிரைலரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸ். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்படுள்ளது. தீரன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளது. இந்த சீரிஸை ஷரத் ஜோதி இயக்கியுள்ளார். ஜெயச்சந்திர ஹாஷ்மி, பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். இந்த சீரிஸுகு சதிஷ் சதிஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.
இந்த சீரிஸின் டிரைலரில், நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் பா.பா.மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றி தகவல்களை பகிர்கின்றனர். மேலும் வீரப்பன் அவரே, “என்ன நடந்ததுனு என்னுடைய வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து சொல்றேன். தப்பு என்னுடையதா இல்ல அரசாங்கத்துதா..” என பேசும் வீடியோ இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.