வரும் ஏப்ரல் 2-ம் தேதியன்று ‘சுல்தான்’ படம் வெளியாகவிருக்கும் நிலையில் கார்த்தியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்தியின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘கொம்பன்’ படத்தின் இயக்குநரான முத்தையாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார் கார்த்தி.
இந்தப் படத்தையும் 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரிக்கப் போகிறது.
படத்தில் கார்த்திக்கு ஜோடியாக மீண்டும் லட்சுமி மேனன் நடிக்கவிருக்கிறாராம்.
ஒருவேளை ‘கொம்பன் பாகம்-2’ ஆக இருக்குமோ..?