கொலை செய்யுறது ஒரு அடிக்ஷன்!:  போர் தொழில் டீசர்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

மர்மமான முறையில் பெண்களை கொலை செய்யும் நபரை போலீஸ் தேடுவது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. ‘போர் தொழில்’ திரைப்படம் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.