Wednesday, April 10, 2024

மிரட்டலாக வெளியானது ’KH 234’ டைட்டில் டீசர்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசனின்  234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். இதுவரை KH 234 என்ற டைட்டிலில் இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது KH 234 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் கமல்.

அடுத்ததாக  தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் நடிக்கும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார் கமல். இந்த சூழ்நிலையில் இயக்குனர் மணிரத்னம் உடன் நாயகன் படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பின்னர், கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் இந்த இருவர் கூட்டணியும் மாஸ் காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தற்போது KH 234 டைட்டில், அட்டகாசமான டீசருடன் வெளியாகியுள்ளது. Thug Life என்ற டைட்டிலும் மிரட்டலான டீசரும் வெளியாகி ரசிகர்களுக்கு உச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீசரில், “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்” என செம்ம மிரட்டலாக மாஸ் காட்டியுள்ளார் கமல். ஏ ஆர் ரஹ்மானின் பிஜிஎம், மணிரத்னத்தின் இயக்கம், அன்பறிவ் மாஸ்டரின் அட்டகாசமான ஆக்ஷன் என மிரட்டலாக உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் கமலுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளது அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News