போக்குவரத்து போலீசார் அவ்வப்போது திரைப்படங்களின் போஸ்டர்கள் மற்றும் அதில் இடம்பெறும் காட்சிகளை வைத்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘தொடரும்’ படத்தின் போஸ்டர் ஒன்றை வைத்து கேரள போலீஸார் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் மோகன்லால் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டி செல்கிறார். இதை குறிப்பிட்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.
