ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்த முதல் படம் ரோஜா இல்லை!

ஏ.ஆர்.ரஹ்மான். 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதற்கு முன் எம்.எஸ்.வி, இளையராஜா ஆகியோரிடம் உதவியாளராக இருந்தார்.

பெரும்பாலும் ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைக்கும் படங்களுக்கு கவிஞர் வைரமுத்துதான் பாடல்கள் எழுதி வந்தார்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், “ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் ரோஜா இல்லை.  அமீர்ஜன் இயக்கிய வணக்கம் வாத்தியாரே தான் முதல் படம். இந்த படம் தயாராகும்போது தயாரிப்பாளரிடம் பணம் இல்லை என்பதால், இளையராஜாவிடம் உதவியாளராக இருந்த ஏ.ஆர்.ரஹ்மானிடம், கீபோர்டு மட்டும் வைத்து இந்த படத்திற்கு மொத்த இசையை அமைக்க முடியுமா என்று கேட்டனர்.

இதற்கு ஓ.கே சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், வி.ஆர்.சம்பத்குமாருடன் இணைந்து ஒரே நாளில் 8 மணி நேரத்தில் கீபோர்டு மூலம் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்தார்.

கார்த்தி, சரண்யா, ராதாரவி, ஜெய்சங்கர், அனுராதா உள்ளிட்ட பலர் நடித்த வணக்கம் வாத்தியாரே 1991-ம் ஆண்டு வெளியானது” என்று வைரமுத்து கூறியுள்ளார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.