கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் விருமன், சர்தார் ஆகிய படங்களை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் கடந்த மே மாதம் வெளியானது. தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் படத்தை பிரேம் குமார் டைரக்டு செய்ய பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரேம் குமார் ஏற்கனவே விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தை டைரக்டு செய்தவர். படத்தில் அரவிந்தசாமியையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேசி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.