ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து அக்டோபர் 1ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது ‘காந்தாரா சாப்டர் 1’. எதிர்பார்த்ததைப் போலவே படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது 818 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் வெளிவந்த இந்தியப் படங்களில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் இருந்த ‘சாவா’ ஹிந்திப் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.


