Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விமர்சனம்: கண்ணை நம்பாதே

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே.

நண்பர்களுக்கு கம்பெனி கொடுப்பதற்காக, மதுககடை பாருக்கு வருகிறார் உதயநிதி. அவருக்கு ஒரு போன் வர, வெளியில் வருகிறார். அப்போது, கார் ஓட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பூமிகாவை வீட்டில் கொண்டு விட்டு உதவி செய்கிறார் உதயநிதி. உதவி செய்ததற்கு கைமாறாக அவர் தனது காரை கொடுத்து, காலையில் கொண்டு வாருங்கள் என்று அனுப்புகிறார்.

அவர் சொன்னபடியே காரை கொண்டு சென்று காலையில் காரை எடுக்க செல்லும் போது காரின் ட்ரக்கில் பூமிகா பிணமாக இருப்பது போன்று காட்சி படுத்தப்படுகிறது.

அவர் எப்படி இறந்தார் இதற்கும் உதய் உடன் இருக்கும் பிரசன்னாவிற்கும் என்ன சம்பந்தம்.. உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை திரில்லிங்காக சொன்னால் அதுதான் கண்ணை நம்பாதே படத்தின் கதை!

உதயநிதி இயல்பாக நடித்து இருக்கிறார். கார் டிக்கியில் பிணத்தை பார்த்து அதிர்வது. பிரசன்னா குறித்து தெரிந்தவுடன், அதிரடியாக களம் இறங்குவது, என்று தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். நாயகி ஆத்மிகாவிற்கு சாதாரண காதலி கதாபாத்திரம். வசுந்தரா வில்லியாக வருகிறார்.

பிரசன்னா, மாரிமுத்து உள்ளிட்டோர் வழக்கம்போல் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.

க்ரைம் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவு, இசை ஆகியவை மிரட்டுகின்றன. அதே போல எடிட்டிங். அவ்வளவு ஷார்ப்

படத்தின் பெரும்பலம் சஸ்பென்ஸ். ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு திரில்லிங்காக நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குநர் மாறன். அடுத்தது படத்தின் பின்னணி இசை.. மிரட்டுகிறது. அவ்வளவு பொருத்தம்.

நம்மை இன்னும் அதிகமாக படத்தோடு ஒன்ற வைப்பது அதுதான். அருள்நிதி நடிக்க வேண்டிய படத்தில் உதயநிதி நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் விரும்பிகளுக்கு கண்ணை நம்பாதே சஸ்பென்ஸ் த்ரில்லர்.

- Advertisement -

Read more

Local News