எப்போதுமே ஹீரோக்களையும், இசையமைப்பாளர்களையும் பாடலிலேயே சீண்டிப் பார்க்கும் கண்ணதாசன், இந்த வரிசையில் ஒரு நடிகையையும் சேர்த்துவிட்டார்.
அன்னை இல்லம் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தன்னுடைய காதலியான தேவிகாவை நினைத்து பாடுவது போல் ஒரு பாடல். அதை, ‘எண்ணிரண்டு 16 வயது..’ என துவங்கி இருந்தார் கண்ணதாசன்.
அந்தப் பாடல் வரியை கேட்ட இயக்குனரும் இசையமைப்பாளரும் தேவிகாவை பார்த்தால் உங்களுக்கு 16 வயது பெண் போலவா தெரிகிறது என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு கவிஞர் நன்றாக கேளுங்கள் எண்ணிரண்டு பதினாறு என்று நான் எழுதி இருக்கிறேன். இரண்டு 16, 32 அல்லவா என்று கேட்டு சிரித்திருக்கிறார். உண்மையில் தேவிகா இந்த படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு 32 வயது தானாம். பொதுவாக நடிகைகள் தங்களுடைய வயதை வெளியில் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் இப்படி ஒரு பாட்டை எழுதி தேவிகாவை சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறார் கவிஞர்.