“பெண்கள் நாட்டின் கண்கள்!”:  கங்கனா ரணாவத்

நாடாளமன்ற புதிய கட்டிடத்தில் துவங்கிய கூட்டத்தொடர் துவங்கியது. இதில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
புதிய நாடாளுமன்றத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களாகப் பாலிவுட் நடிகைகள் கங்கனா, ஈஷா குப்தா உள்ளிட்ட பிரபலங்கள் அழைக்கப்பட்டனர்.  அவர்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளித்தனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, ” பெண்கள் மேம்பட அதிகாரம் பெற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு பெரிய நிகழ்வை ஆளும் கட்சியும் பிரதமர் மோடியும் செய்து உள்ளார்கள். பெண்கள் தான் நாட்டின் முன்னுரிமை என்பதை உணர்த்தும் மசோதா இது. “பெண்கள் நாட்டின் கண்கள்!”:  கங்கனா ரணாவத்” எனக் கூறினார்.