Saturday, July 27, 2024

கமலின்  ’ஆளவந்தான்’டிச.8 ரீ –ரிலீஸ்  கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கக்கத்தில் வெளியானது.

தயாரிப்பாளர் தாணுவின் ’வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் கமல்  நாயகனாகவும், வில்லனாகவும் இரண்டு வெவ்வெறு தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆனா பிறகு உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 8-ம் தேதி ‘ஆளவந்தான்’ திரைப்படம் உலகம் முழுவதும் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News