Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கமலின் 234-வது படமான இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் புரமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. இதற்கான அப்டேட்டை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிடும் என்று தெரிகிறது.

இப்படத்தைத் தவிர ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘இந்தியன் 3’, ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஆகிய படங்களில் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

Read more

Local News