பண விசயத்தில் கமல் கறாரானவர், உதவி செய்வும் மாட்டார்.. கேட்கவும் மாட்டார் என்பதே பலரது எண்ணம்.
ஆனால், “கமல் உதவி கேட்கமாட்டாரே தவிர, உதவிக்கரம் நீட்டுவதில் தயங்கியதில்லை” என்று தெரிவித்து இருக்கிறார், நடிகர் ராஜேஷ்.
சமீபத்தில் யு டியுப் சேனல் ஒன்றில் பேசிய இவர், “பாரதிராஜா இயக்குநராக அறிமுகமான ’16 வயதினிலே’ படத்தை தயாரித்த ராஜக்கண்ணு தொடர்ந்து பல படங்களை தயாரித்தார். நான் நடித்த கன்னி பருவத்திலே படத்தையும் அவர்தான் தயாரித்தார்.
ஒரு கட்டத்தில் அவர் மிகப்பெரிய கடன் சுமையில் இருந்தார்.
ஒரு நாள் நான் கமலிடம் ‘ராஜகண்ணு கடன் சுமையால் அவதிப்படுகிறார். அவருக்கு உதவி செய்தால் கொஞ்சம் கடன் சுமை தீரும்’ என வேண்டுகோள் விடுத்தேன்.
உடனே ராஜக்கண்ணுவுக்கு கால்ஷீட் கொடுத்தார் கமல். மகாநதி படத்தை ராஜ்கண்ணு தயாரித்தார். அவரது கடன் பிரச்சினைகள் தீர்ந்தன” என்று தெரிவித்து உள்ளார் ராஜேஷ்.