Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

கலையரசன் ஜோடியாக மிர்னா நடிக்கும் புதிய படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்த SKLS கேலக்சி மால் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.

மா’, ‘லட்சுமி’ உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய குறும் படங்களையும், நயன்தாரா நடித்த ஐரா’ படத்தையும் இயக்கிய சர்ஜுன் இப்படத்தின் கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக மிர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் முன்னணி நடிகர், நடிகையர் பலர் நடிக்கின்றனர்.

திரைக்கதை – அனுசுயா வாசுதேவன், ஒளிப்பதிவு – பாலமுருகன், பாடல்கள் – யுகபாரதி, இசை – R.சிவாத்மிகா, கலை இயக்கம் – மதன், படத் தொகுப்பு – பிரவீன், உடைகள் வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன், மக்கள் தொடர்பு – நிகல் முருகன், தயாரிப்பு நிர்வாகம் – தண்டபாணி, நிர்வாக தயாரிப்பு – துர்கேஷ், இணை தயாரிப்பு – சாரா மோகன், தினகர் பாபு, தயாரிப்பு – E.மோகன், கதை, இயக்கம் – சர்ஜுன்.

ஒரு அசாதாரணமான சூழலில் தனிமையில் இருக்கும் பெண்ணை ஒரு இளைஞன் சந்திக்க நேருகிறது. அந்த சூழலில் நடக்கும் விஷயங்களை இருவரும் எவ்வாறு சந்தித்து, பயணித்து கடந்து போகிறார்கள் என்பதை சுவாரஸ்யமான இதுவரை சொல்லப்படாத பின்னணியில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் கலையரசன், நாயகி மிர்னா, இயக்குநர் சர்ஜூன், தயாரிப்பாளர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News