Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“கே.விஸ்வநாத் த படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும்!”: கமல்ஹாசன் புகழஞ்சலி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் உடல்நலக்குறைவால் நேற்று (பிப் 1) நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 92.

தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வந்த கே. விஸ்வநாத் பத்மஸ்ரீ விருது, தாதா சாஹப் பால்கே விருதுகளை வென்றுள்ளார்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே. விஸ்வநாத், ஏரளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். நடித்துள்ளார்.ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பெடிபுல்லிபாரு என்ற ஊரில் 1930இல் பிறந்த இயக்குநர் கே. விஸ்வநாத், 1965ஆம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானார். தெலுங்கு, இந்தி மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் கமல்ஹாசன் – அர்ஜுன் நடித்த குருதிப்புனல் படம் மூலம் நடிகராக தோன்றினார்.

இதன் பின்னர் அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் பகவதி, புதிய கீதை, தனுஷுடன் யாரடி நீ மோகினி, விக்ரமுடன் ராஜபாட்டை, ரஜினியுடன் லிங்கா போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவர் தமிழில் கமல், இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோருடன் இணைந்து உத்தமவில்லன் படத்தில் நடித்தார்.

இயக்குநர் கே. விஸ்வநாத் மறைவுக்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கமல் நடித்த சலங்கை ஒலி படத்தை இயக்கியவரும் இவரே.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ”வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், கலையின் அழியா தன்மையையும் நன்கு அறிந்தவராக இருந்தார் ‘கலாதபஸ்வி’ விஸ்வநாத்; அவரது படைப்புகள், காலம் கடந்து கொண்டாடப்படும்; வாழ்க அவரது கலை!” என புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

- Advertisement -

Read more

Local News