Saturday, September 21, 2024

எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதன்படி வரும் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள்.

சங்கத்தின் தேர்தலை நடத்தித் தருவதற்காக ச.செந்தில்நாதன் என்னும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள்(2 நபர்கள்), இணைச் செயலாளர்கள்(4 நபர்கள்), செயற்குழு உறுப்பினர்கள் 12 நபர்கள் என்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இதற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிவரையிலும் வழங்கப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெற்றது.

இதன் முடிவில் தற்போது தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார், யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர்.

செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ்குமாரும் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு பால சேகரனும், ரமேஷ் கண்ணாவும் போட்டியிடுகின்றனர்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கு ‘யார்’ கண்ணன், காரைக்குடி நாராயணன், ரவி மரியா, மனோபாலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், மதுரை தங்கம், வி.பிரபாகர், சி.ரங்கநாதன், எம்.ரத்னகுமார், பி.சாந்தகுமார், டி.கே.சண்முகசுந்தரம், என்.வேல்முருகன் ஆகிய 10 பேர் போட்டியிடுகின்றனர்.

12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், பாபு கணேஷ், ஏகாம்பவாணன், ஹேமமாலினி, வீ.ஜெயப்பிரகாஷ், யுரேகா, பொன்ராமன், பேரரசு, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜா கார்த்திக், ஏ.எல்.ராஜா, கே.ராஜேஸ்வர், ராதாரவி, சாய்ரமணி, சினேகன், ஷரவணன் சுப்பையா, சரண், எம்.சி.சேகர், பி.சாந்தகுமார், த.சிங்கபுலி அண்ணாவி, ஏ.வெங்கடேஷ், பா.விஜய், ந.வேல்முருகன், விவேகா ஆகிய 25 பேர் போட்டியிடுகின்றனர்.

சங்கத் தேர்தல் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வடபழனி, கமலா தியேட்டர் அருகில் இருக்கும் திரையிசை கலைஞர்கள் சங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறும்.

வாக்குப் பதிவுகள் முடிந்ததும் அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

- Advertisement -

Read more

Local News