ஹிந்தியில் சைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற படங்களில் நடித்த ஜோதிகா தற்போது டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரின் பிரமோசன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது சபானா ஆஷ்மியுடன் தானும் கலந்து கொண்டார் ஜோதிகா. அவர்களுடன் நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ள இந்த தொடரை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார்.இந்த தொடர் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 28 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பது போன்று நடித்துள்ளார் ஜோதிகா. இதுதொடர்பான போட்டோக்களை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ஜோதிகாவா இப்படி நடித்துள்ளார் என கருத்து பதிவிட்டுள்ளனர்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more