’ஜிகர்தண்டா 2’ வெற்றியைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு இன்று 10-ம் தேதி வெளியாகயிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் படத்தின் வெற்றிக்காக படக்குழு திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.