Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

மறைந்த நடிகையை திரையில் கொண்டுவந்த ஜெயம் ரவி தந்தை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இளவயதிலேயே மரணமடைந்தாலும் நடிகை  ஷோபாவை மறக்கவே முடியாது. முள்ளும் மலரும், பசி உட்பட தனது படங்களில் நடிப்பில் முத்திரை பதித்தவர். தேசிய விருதும் பெற்றவர்.

சிவக்குமார், விஜயகாந்த், ஷோபா ஆகியோரின் நடிப்பில்   சாமந்திப்பூ என்ற படம் உருவானது. படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது.  இந்த சூழலில்தான் பட நாயகி ஷோபா மறைந்தார். அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்றால், இன்னொரு பக்கம், அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்தன.

பட தயாரிப்பாளரும்  இயக்குநரும் தவித்துப்போனார்கள். இந்த நிலையில், எடிட்டர் மோகன்  புத்திசாலித்தனமாக ஒரு காரியம்  செய்தார்.

அப்படத்தில் ஷோபா நடித்து வேண்டாம் என ஒதுக்கப்பட் டகாட்சிகளில் இருந்து நல்ல நல்ல ஷாட்களை மட்டும் தனியே எடுத்தார். பிறகு,  டூப் போட்டு  லாங் ஷாட்டில் சில காட்சிகளை படமாக்க கூறினார். இரண்டையும் இணைத்து ஷோபா நடித்தது போலவே படத்தை முடித்துத்தந்தார்.

இறந்த பிறகும் நடித்தவர் என்றால் அது ஷோபாதான்.

இதற்குக் காரணமான எடிட்டர் மோகன்தான் இயக்குனர் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவியின் தந்தை.

- Advertisement -

Read more

Local News