Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

பில்லா படத்தில் ஜெயலலிதா நடிக்க இருந்தாராம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த்திரை உலகில் உச்சநட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 80களில் இவரது படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான்
இவருடன், குஷ்பு, மீனா, ரம்பா, விஜயசாந்தி, நதியா, சௌந்தர்யா, ஜோதிகா, திரிஷா, ஐஸ்வர்யாராய் என பெரும்பாலான கதாநாயகிகள் நடித்தும் விட்டனர். அப்படி நடிக்காத நாயகிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். சுகன்யா, நிரோஷா, சித்தாரா, ஜெயலலிதா என ஒரு சில நடிகைகள் தான் நடிக்கவில்லை.

இந்நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பில்லா படத்தில் நாயகி ஸ்ரீபிரியா வேடத்தில் நடிக்க, அப்படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி, முதலில் அணுகியது ஜெயலலிதாவைத் தான். ஆனால், ஜெயலலிதாவிற்கு அப்போதிருந்த சூழல்கள் காரணமாக, நடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

ரங்கா படத்திலும், கே.ஆர்.விஜயா வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் ஜெயலலிதாதான். அப்போது, ஜெயலலிதா, அரசியலில் நுழையத் தீர்மானித்து, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததால், வாய்ப்பை நிராகரித்து விட்டார்.
இதை, ஜெயலலிதாவே, ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு, 10.06.1980 அன்று எழுதிய கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News