ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் மைக்கேல் சந்தீப் கிஷன் – திவ்யான்கா கவுசிக் ஜோடியாக நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவது எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி புத்தகப் பித்தர்.
இது குறித்து அவர் கூறியபோது, “வாழ்க்கையில ஒரு விசயத்தை சரியாக அணுக இந்த வாசிப்பு பழக்கம் உதவுகிறது. இந்த வாசிப்பு பழக்கத்தினால் சுயநலம் குறைந்திருக்கிறது; அறம் சார்ந்து வாழும் விருப்பம் ஏற்படுகிறது.
திரைப்படத்தின் கதையை உருவாக்குவதற்கு மட்டுமல்ல.. கதாபாத்திரத்தை செம்மைப் படுத்தவும், வாசிப்பு உதவுகிறது. இன்னும் சொல்லப்போனால், வாழ்க்கை என்பது சினிமா எடுக்கிறது இல்லை. வாசிக்கிறதுதான் வாழ்க்கை” என்கிறார்.
மேலும், “இந்த வாசிப்பு பழக்கத்துக்கு முக்கிய காரணம் இயக்குநர் ராம். அவரிடம் உதவியாளராக இருந்தாலே படிக்கும் ஆர்வம் தன்னால் ஏற்பட்டு விடும். எப்போதுமே, ‘படி.. படி’ என உதவியாளர்களை ஊக்கப்படுத்துவார். இதை வாசி என சொல்ல ஒரு குரு தேவை. அப்படி ஒரு குருவாக ராம் கிடைத்தார். அது ஒரு வரம்” என நெகிழ்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.