Wednesday, November 6, 2024

“ஆஸ்காருக்கு ஜவான்!”: இயக்குனர் அட்லீ

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். உலகம் முழுவதும் இருந்து போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட படங்களில் இருந்து, சிறந்த படங்களை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. இதனால் இந்த விருதைப் பெற உலகம் முழுவதும் கடுமையான போட்டி நடைபெறும். இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுவரை கொண்டு செல்ல முடிவு செய்து இருப்பதாக இயக்குனர் அட்லீ குறிப்பிட்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரையரங்குகளில் வெளியானது. மூன்று மொழிகளில் வெளியான ஜவான் திரைப்படம் இந்தியா முழுவதுமே மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நடிகர் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா, யோகி பாபு, சஞ்சய் தத் ஆகியோரின் நடிப்பு என்று கூறப்படுகிறது. மேலும் படத்திற்கு அனிருத்தினுடைய இசையும் கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது. படத்தின் மீது விமர்சனங்களும் குறிப்பிட்ட அளவு பாசிட்டிவாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே படத்தினுடைய வெற்றி விழாவை மும்பையில் சமீபத்தில் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து இயக்குனர் அட்லீ ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருப்பது. திரைத் துறையில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்குமே கோல்டன் குளோப், ஆஸ்கர், தேசிய விருதுகளை பெறுவதற்கு ஆசை இருக்கும். அதேபோல் தான் எங்களுக்கும். ஜவான் திரைப்படத்தை ஆஸ்கர் விருது வரை கொண்டு செல்ல இருக்கின்றோம். இதற்காக நடிகர் ஷாருக்கான் நானும் பேசி வருகிறோம் என்று தெரிவித்தார்.

நடப்பு ஆண்டு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது விழாவில் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தையும் ஆஸ்கர் தேர்வு பட்டியலுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News