15 நாட்களில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் ன் ‘ஜவான்’

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்தது. முதல் நாள் படம் இந்தி சினிமா வரலாற்றை புரட்டிபோட்டது. உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.129 கோடியை அள்ளியது. 5 நாட்களில் ரூ.574.89 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 13 நாட்களில் ரூ.907.54 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியில் படம் ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருகிறது. விரைவில் படம் ரூ.1000 கோடியை எட்டும் என்பதில் மாற்றமில்லை.

இந்திய பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை பொறுத்தவரை அமீர்கானின் ‘தங்கல்’ படம் ரூ.2000 கோடி வசூலுடன் முதலிடத்திலும், ‘பாகுபலி 2’ (Baahubali 2: The Conclusion) ரூ.1800 கோடியுடன் மூன்றாவது இடத்திலும், ‘ஆர்ஆர்ஆர்’ ரூ.1300 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.