ஜப்பான் – விமர்சனம்

 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஜப்பான். இந்த திரைப்படம் கார்த்தியின் 25வது படமாகும்.

ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி நடித்திருப்பார் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இயக்குனர் ராஜ்முருகன் என்றால் தனது படங்களில் அரசியலும் கலந்து இருக்கும். தனித்துவமான கதைக்களத்தை ரசிகர்களுக்கு கொடுக்க கூடிய இயக்குனர் என்ற பெயர் அவருக்கு உண்டு. இப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்ட ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த நபராக இருக்கிறார் நாயகன் ஜப்பான் முனி  [கார்த்தி] . இந்த சமயத்தில் கேவையில் உள்ள  நகை கடையில் ரூ. 200 கோடி மதிப்புடைய  நகைகள் திருடபோகிறது. இவ்வளவு பெரிய திருட்டுக்கு காரணம் யாராக இருக்கும் என்று யோசிக்கிறது போலீஸ்.

இந்தப் புள்ளியில்தான் காவல்துறைக்கு ஜப்பான் முனி (கார்த்தி) மீது சந்தேகம் வருகிறது. ஜப்பான் முனி ஒரு பெரிய திருடன். நாடு முழுவதும் சென்று பல்வேறு மாநிலங்களில் நகைகளைக் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் திரைப்படம் எடுத்து ஜாலியான வாழ்க்கை வாழ்பவன்தான் ஜப்பான் முனி.

காவல்துறை தன்னைத் தேடுவதைத் அறிந்து கொண்டு  தனது காதலியான சஞ்சுவை(அனு இம்மானுவேல்) கடத்திக்கொண்டு பல பகுதிகளுக்கு காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடுகிறான் ஜப்பான் முனி.

ஒரு கட்டத்தில்  போலீஸ் அவரை பிடித்து விசாரிக்கிறது அந்த நகைகளை நான் கொள்ளை அடிக்க வில்லை, இந்த கொள்ளைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார். நகைத்திருட்டில்  சம்பந்தப்பட்டவன் வேறொருவன், அவன் என்னை இதில் மாட்டிவிட்டு தப்பித்து விட்டான் என கூறுகிறார் ஜப்பான்.அடுத்து என்ன நடந்தது உண்மையில் அந்த நகைகளை யார் திருடினார்கள்  என்பதே படத்தின் மீதி கதை.

நாயகன்  கார்த்தி வழக்கமான தனது பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். அதே போல் அவருடன் நடித்த விஜய் மில்டன், சுனில் மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரின் நடிப்பும் பாரட்டலாம்.

கதாநாயகியாக அனு இமானுவேல் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர. வலுவாக இல்லை என்றாலும் ஓகே.

படத்தின் ஆரம்பம் விறுவிறுப்பாக நகர்கிறது. இரண்டாம் பாகம் சற்று சுவாரஸ்யம் குறைந்து கானப்படுகிறது. கடைசியாக வரும் அந்த 20 நிமிடம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இரண்டாம் பாதியில் சற்று தொய்வுதான்  இருந்தாலும் மனதை தொடு வைத்திருக்கிறார் இயக்குனர். மற்றபடி சுவாரஸ்யம் குறையாமல் பயணிக்கிறது ஜப்பான்.

 

அரசியல் வசனங்கள் பக்காவாக இருக்கிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பொருந்துகின்றன. ஜி.வி. பிரகாஷ் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு மற்றும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு மற்றும் சண்டை காட்சிகள் படத்தின் பக்கபலமாக அமைந்துள்ளது. மொத்ததில் ஜப்பான் ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளது.