எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் வித்தியாசாகர் இசையில் ஷாம் நாயகனாக நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இயற்கை. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும்,வசூல் ரீதியாகவும் வெற்றியும் பெற்றது.
ஜனநாதன் குறித்து நடிகர் ஷாம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நானே தேர்வு செய்த படம் தான் இயற்கை. லேசா லேசா படம் எனது தயாரிப்பாளர் சொல்லி நடித்தது.’உள்ளம் கேட்குமே’படம் ஜீவா சொன்னதால் நடித்தேன். பெரும்பாலும் என் படத்தேர்வுகள் எல்லாம் யாரோ ஒருத்தர் சொல்லித்தான் நான் நடித்திருக்கிறேன்.
ஆனால் ஜனநாதன் எனக்கு அறிமுகம் இல்லாத நபர். புது இயக்குனர் வந்து என்னிடம் கதை சொல்கிறார். யாருடைய தலையீடும் இல்லாமல் கதை பிடித்ததும் ஒத்துக்கொண்டேன். அவர் மீது வைத்த நம்பிக்கை,உழைப்பு அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.இயற்கை படம் என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம். நான் மறக்க முடியாத நபர் ஜனா சார் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் ஷாம்