ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த லிஜோமோள் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள புதிய படம் “ஜென்டில்வுமன்”. இந்தப் படத்தை கோமலா ஹரி பிக்சர்ஸ் தயாரிக்க, ஹரி பாஸ்கரன் தயாரிப்பு பொறுப்பேற்றுள்ளார். அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவை சா. காத்தவராயன் செய்துள்ளார், இசையமைப்பை கோவிந்த் வசந்தா கையாண்டுள்ளார். இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார்.
படத்தினை பற்றி இயக்குநர் ஜோசுவா சேதுராமன் கூறும்போது, “ஜென்டில் (Gentle) என்பது ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களுக்கும் பொருந்தும். பொதுவாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உடல் சார்ந்ததாக இருக்கிறது. இது ஏன் இப்படி உள்ளது என்றால், இந்தச் சமூகம் பெண்களின் உடலை ஒரு பொருளாகவும் பண்டமாகவும் பார்க்கிறதுதான் காரணம். இந்த விஷயத்தைப் பற்றிய விவாதம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், பெண்கள் தொடர்பாக சமூகத்தில் நிலவும் சில கற்பிதங்களை கேள்விக்குட்படுத்தும் வகையில் இந்த படம் இருக்கும். இது இரண்டு பெண்களின் கதையை மையமாகக் கொண்டுள்ளது” என்றார்.
ஹரிகிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் பெண்கள் பற்றிய விஷயங்களை பேசினாலும், இது ஒரு பெண்ணிய படம் அல்ல. சமூகத்தில் நிகழும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளேன். லிஜோமோள், இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளது, மார்ச் மாதம் திரைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.