Thursday, April 11, 2024

பிரபல இயக்குநருக்கு சிறை! விடுவிக்க சீனு ராமசாமி கோரிக்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஜாபர் பனாஹியை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரபல தமிழ்த் திரைப்ட இயக்குநர் சீனு ராமசாமி வலியுறுத்தி உள்ளார்.

சாபர் பனாகி உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் இரானிய திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய முதல் திரைப்படமான, ‘தி ஊன்டட் கெட்ஸ்’ திரைப்படம் 1988ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து, கிஷ், தி ப்ரெண்ட், தி மிரர், ஆஃப்சைட் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம், உலக அளவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
2000மாவது ஆண்டு நடைபெற்ற வெனிசு திரைப்பட விழாவில், இவரது, ‘தி சர்க்கிள்’ திரைப்படத்துக்கு தங்க சிங்கம் விருதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் ‘ஆப்சைடு’ என்ற திரைப்படத்துக்கு வெள்ளிக்கரடி விருதும் கிடைத்தன.

உலகப் புகழ் பெற்ற ஈரான் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஜாபர் பனாஹியை வீட்டுச் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரபல தமிழ்த் திரைப்ட இயக்குநர் சீனு ராமசாமி வலியுறுத்தி உள்ளார்.

சாபர்பனாகி உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் இரானிய திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய முதல் திரைப்படமான, ‘தி ஊன்டட் கெட்ஸ்’ திரைப்படம் 1988ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து, கிஷ், தி ப்ரெண்ட், தி மிரர், ஆஃப்சைட் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம், உலக அளவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
2000மாவது ஆண்டு நடைபெற்ற வெனிசு திரைப்பட விழாவில், இவரது, ‘தி சர்க்கிள்’ திரைப்படத்துக்கு தங்க சிங்கம் விருதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் ‘ஆப்சைடு’ என்ற திரைப்படத்துக்கு வெள்ளிக்கரடி விருதும் கிடைத்தன.

ஈரான் அரசின் மத ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் பேசியதற்காக கடந்த 2010ம் ஆண்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘இருபது வருட வீட்டுச்சிறை.. தவிர, இந்த காலகட்டத்தில் அவர் திரைப்படம் எடுக்கக்கூடாது.. ஸ்டார்ட், கட் என்ற வார்த்தைகளையே பயன்படுத்தக்கூடாது’ என்று உத்தரவிட்டது ஈரான் அரசு.


இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு, செல்போன் மூலமாக – தனது நிலை குறித்து… ஒடுக்கு முறையின் கொடூரம் குறித்து – படம் எடுத்தார், ஜாபர் பனாஹி. அதை பென் டிரைவில், பதிந்து ரகசியமாக வெளியே அனுப்பினார். “This Is Not A Film” என்ற அந்தத் திரைப்படமும் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், அவருக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது ஈரான் அரசு.
இதைத் தொடர்ந்து, “கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் நீண்ட நாட்களாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இயக்குநர் ஜாபர் பனாஹியை விடுதலை செய்ய வேண்டும்” என்று பிரபல தமிழ் இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஈரான் நாட்டில், அபதான் தீவில் செயல்படும் ‘மூவிங் திரைப்பட கல்லூரி’ அளிக்கும் த் திருவிழாவில்’ சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது. இதையும் தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ள சீனு ராமசாமி, “ நவீன யதார்த்த ஈரானிய சினிமா மேதை இயக்குநர் + நடிகர் ஜாபர்பனாகி, எனக்கு கலை உந்து சக்தியாக இருப்பவர். அவர் ஆறு வருட சிறைதண்டனை பெற்று இரானின் டெக்ரான் சிறையில் இருக்கிறார்
கருத்து சுதந்திர உலகில் அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமென இந்நேரத்தில் வேண்டுகிறேன்.
ஈரான் தந்த விருதின் ஈரத்தோடு இதை கேக்கிறேன்” என்று சீனு ராமசாமி குறிப்பிட்டு உள்ளார்.
“சீனு ராமசாமியின் கோரிக்கையினால், ஈரான் இயக்குநர் ஜாபர் பனாஹியின் கைது சம்பவம், தமிழ்நாட்டில் கவனம் பெற்றுள்ளது. திரைத்துறையின் மற்ற ஆளுமைகளும், இதே கோரிக்கையுடன் குரல் கொடுக்க வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

- Advertisement -

Read more

Local News