Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

நடிகர் கதிர் நடிக்கும் ‘இயல்வது கரவேல்’ படம் பூஜையுடன் துவங்கியது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த கதிர், மீண்டும் முழுக்க முழுக்க கல்லூரியை கதைகளமாக கொண்ட புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். 

சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்ட  இந்தப் படத்திற்கு ‘இயல்வது கரவேல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் அறிமுகமான யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் இப்படத்தில் ‘மாஸ்டர்’ மகேந்திரன், கரு.பழனியப்பன், ஆடுகளம்’ நரேன், ஸ்மைல் சேட்டை’ அன்புதாசன், லகுபரன் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கிறார்கள் .

ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ‘பரியேரும் பெருமாள்’ ஸ்ரீதர், கலை இயக்குநராக மாயப்பாண்டி, படத் தொகுப்பாளராக தியாகு மற்றும் மக்கள் தொடர்பாளராக ரியாஸ் கே.அஹ்மத்  ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநரான, எஸ்.எல்.எஸ்.ஹென்றி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் இன்று நேற்று நாளை’ இயக்குர் ரவிக்குமார் மற்றும் அண்ணனுக்கு ஜே’ இயக்குர் ராஜ்குமாருடனும்  சினிமா பயின்ற அனுபவம் கொண்டவர்.

கல்லூரி மாணவர்கள் அரசியல் ஈடுபடுவது பற்றியான விஷயங்களை இப்படம் பேசவுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. திண்டிவனம், புதுச்சேரி மற்றும் வட சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கதிர், லகுபரன், மாஸ்டர் மகேந்திரன், யுவலட்சுமி, கரு.பழனியப்பன் மற்றும் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News