‘காந்தாரா சாப்டர் 1’ வெளியான பிறகு நடிகை ருக்மிணி வசந்த் இந்திய அளவில் பிரபலமானவர் ஆகிவிட்டார். அவரின் அழகு மட்டுமல்லாமல், நடிப்புத் திறமையாலும் பார்வையாளர்களை கவர்ந்திருப்பது இதற்குக் காரணமாகும். இதன் மூலம் அவர் ஒரு நட்சத்திர நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

காந்தாரா திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானோர் அவரை “நேஷனல் கிரஷ்” என அழைத்து வருகிறார்கள். ஆனால் இதற்கு ருக்மிணி வசந்த் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: என்னை நேஷனல் கிரஷ் என்று அழைப்பது நன்றாகவே இருக்கிறது. ஆனால் மக்கள் என்னை ‘ப்ரியா’ என்று அழைப்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், ‘சப்த சாகரதாச்ச எல்லோ’ படத்தில் நடித்த ப்ரியா என்ற கதாபாத்திரத்தை மக்கள் உண்மையிலேயே விரும்புகிறார்கள்,” என்றார்.