நடிகை கீர்த்திசுரேஷ் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இதனைதொடர்ந்து தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன திருமணத்துக்குப் பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் செய்தும், உணவு கட்டுப்பாட்டுகளை கடைபிடித்தும் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
இந்நிலையில் உடல் எடை குறைத்தது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். அதில் திருமணத்துக்குப் பிறகு உடல் எடை சற்று கூடிவிட்டேன். இதனால் சில உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தேன். தற்போது உடற்பயிற்சி மூலம் சுமார் 9 கிலோ எடையைக் குறைத்து உள்ளேன். சரியான உடற்பயிற்சி, உணவு பழக்கங்களும் நல்ல பலனைத் தரும். பெண்களும் உடற்பயிற்சியில் அக்கறை காட்டுவது நல்லது என்று கூறியுள்ளார்.