நடிகர் கருணாகரன் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ‘கலகலப்பு’, ‘சூது கவ்வும்’, ‘விவேகம்’, ‘தொடரி’, ‘ஜிகர்தண்டா’, ‘ரெட்ரோ’, ‘யாமிருக்க பயமே’, ‘கப்பல்’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் தனித்த இடம் பெற்றவர்.

சென்னையில் நடைபெற்ற ‘ஆர்யன்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருணாகரன் கூறியதாவது:“என்னுடைய முதல் படம் ‘கலகலப்பு’. அதன் பின் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘யாமிருக்க பயமே’ என தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தது. அதனால் சினிமா இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் சில படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காதபோது, சினிமாவை விட்டு வெளியேறலாம் என பலமுறை நினைத்தேன். அப்போது விஷ்ணு தான், ‘உன்னைப் போல திறமையான நடிகர்கள் சினிமாவை விட்டு போகக்கூடாது’ என்று கூறி, தனது தயாரிப்பு நிறுவனத்தில் எனக்கு வாய்ப்புகள் அளித்து மீண்டும் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார். அது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் நிச்சயமாக நன்றாக ஓடும்” என தெரிவித்துள்ளார்.

