பழம் பெரும் நடிகை, குமாரி சச்சு தனது 4 வயதிலேயே, ராணி என்ற படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். மாயா பஜார் பிறகு, கதாநாயகி, குணசித்திரம், காமெடி நடிகை என பல கேரக்டர்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் சுமார் 500 படங்கள் வரை நடித்திருக்கிறார். காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.
இப்போதும் டிவி சீரியல்களில் நடிப்பை தொடர்கிறார்.
இந்நிலையில் அவர், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு, வெளியில் நிதி திரட்டுவது தவறு” என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதை விரிவாக அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..