Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

கணவரைப் பிரிந்த ‘அயலான்’ நடிகை:  காரணம் என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இந்தி நடிகை இஷா கோபிகர். இவர் தமிழில், காதல் கவிதை, என் சுவாசக் காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2009 -ம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார்.  இவர்களுக்கு ரியன்னா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் தனது கணவரை இஷா கோபிகர் பிரிந்துள்ளார். இருவரையும் சேர்த்து வைப்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

இது குறித்து இஷா, “கணவருக்கும் எனக்கும் இடையே சமீபகாலமாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனாலும் குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு சேர்ந்து வாழ முயற்சிகள் மேற்கொண்டேன்.   ஆனால்  முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டேன்” என தெரிவித்து உள்ளார்.தற்போது  இஷா கோபிகர் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

தற்போது இ ஷா, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

Read more

Local News