‘வைகைப் புயல்’ வடிவேலுவைப் பற்றி வாரத்திற்கு ஒரு வதந்தி செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த வாரம் வந்திருப்பது அவர் வில்லனாக நடிக்கப் போகிறார் என்பதுதான்.
வடிவேலு தன்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் பல்வேறு வகையான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஒரே ஒரு கேரக்டரில் மட்டும் இதுவரையிலும் நடித்ததேயில்லை. அது வில்லன் வேடம்.
தற்போது அவருக்கு அந்தக் குறையையும் விட்டுவைக்காமல் வில்லன் கதாப்பாத்திரத்திலும் வடிவேலு நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில்தான் வடிவேலு வில்லனாக நடிக்கவுள்ளாராம்.
சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராம்பாலாதான் இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.
வடிவேலு நடிக்கவிருக்கும் இந்த வில்லன் கதாப்பாத்திரம் நிஜமான வில்லனா அல்லது காமெடி கலந்த வில்லனா என்பது படம் பார்த்தால்தான் தெரியும்.