மலையாள தயாரிப்பாளருடன் திரிஷாவுக்கு திருமணமா?

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்து 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் திரிஷா.   40 வயதை எட்டியுள்ள அவர், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஏற்கனவே அவருக்கு திருமணம் நிச்சயமாகி, ரத்தாகி விட்டது. தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். திருமணம் எப்போது என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேரம் வரும்போது நடக்கும் என்று சொல்லி நழுவுகிறார்.

இந்த நிலையில் திரிஷாவுக்கும், பிரபல மலையாள தயாரிப்பாளருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் பரவுகிறது. மேலும் இது குறித்து இரு வீட்டு குடும்பத்தினரும் இது குறித்து பேசி முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தயாரிப்பாளர் பெயர், விவரம் எதுவும் வெளியாகவில்லை.

இது குறித்து பத்திரிகையாளர் செல்வம் ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.