தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளதால், ‘ஜனநாயகன்’ என்னும் திரைப்படம் அவரது கடைசி படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டன.

எச். வினோத் இயக்கும் இந்த படத்தில், விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘தளபதி வெற்றிகொண்டான்’ எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இது உண்மையா, தவறா என்பது படத்தின் வெளிவருகையில்தான் உறுதி ஆகும்.
விஜய் தனது அரசியல் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது அவரது கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்பதனால் ‘வெற்றி’ என்பதைக் கருத்தில் கொண்டு, ‘வெற்றிகொண்டான்’ என அந்தப் பெயரை தேர்ந்தெடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.