நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்த ரஜினிகாந்த், தற்போது அதன் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் மற்றும் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் மீண்டும் இணைந்து நடித்துவருகிறார்கள்.

மேலும், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், தெலுங்கு திரைப்பட நடிகர் பாலகிருஷ்ணா, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு தோற்றம் என்றாலும் முக்கிய கதாபாத்திரமாக இந்த கதாபாத்திரம் இருக்கும் என்றும் பான் இந்தியா படமாக இந்த படமும் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.