நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் முதலாவது பாடலான காவாலா, ஹூக்கும் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இதில், ‘நான்தான் சூப்பர் ஸ்டார்.. எவனாவது வந்தா மண்டையில இடி விழும்’ என்றெல்லாம் வரிகள் இருந்தன. இவை நடிகர் விஜயை குறிவைத்து எழுதப்பட்டவை என பல பத்திரிகையாளர்கள், பல யுடியுப் பேட்டிகளில் கூறினர்.
தற்போது படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘ஜுஜுபி’ வெளியாகி உள்ளது.
சூப்பர் சுப்பு எழுதியிருக்கும் இப்பாடலை தீ (Dhee), அனிருத், அனந்த கிருஷ்ணன் இணைந்து பாடியுள்ளனர்.
இதிலும் ‘கரன்ட்டுல கைய வைச்சுப்புட்ட… அது தொட்டா உடனே தூக்காம தான் விடுமா உன்னைய’, ‘புலிக்கே பசிய தூண்டிபுட்ட ரத்த காவு வாங்காம விடுமா உன்னையே’ போன்ற வரிகள் யாரை குறிப்பிடுகின்றன என்கிற விவாதம் சமூகவலைதளத்தில் எழுந்துள்ளது.