மிருணாள் தாக்கூர், ஹிந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்தபின் தெலுங்கு சினிமாவில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதால் அவர் தென்னிந்திய சினிமாவிலும் புகழ்பெற்ற நடிகையாக மாறினார்.

இந்த சீதா ராமம் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சுமந்தை மிருணாள் தாக்கூர் காதலித்து வருவதாகவும், அவர்கள் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் ஒரு பரபரப்பான செய்தி வெளியானது.
நடிகர் சுமந்த், தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2004ம் ஆண்டு நடிகை கீர்த்தி ரெட்டியை காதலித்து திருமணம் செய்த சுமந்த், 2006ல் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில், தற்போது சுமந்துக்கும் மிருணாள் தாக்கூருக்கும் இடையே காதல் உருவாகியுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.