மாவீரன் படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை என்று இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி தற்போது
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள மாவீரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது.
படத்தில் கரையோரம் வாழ்ந்து வரும் மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு அரசு கொண்டு செல்கிறது. ஆனால், அரசு வழங்கிய அந்த அடுக்குமாடி வீடு தரமில்லாமல் இருப்பதால் அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இது குறித்து மடோன் அஸ்வின், “இந்த படத்தை சில உண்மையான நிகழ்வுகளை மையப்படுத்தி தான் எடுத்துள்ளோம். சென்னை கேபி பார்க் ஹவுசிங் போர்டு பிரச்சனையை தான் இதற்கான ரெஃபரன்ஸாக வைத்துக் கொண்டேன்” என்றார்.