Wednesday, February 5, 2025

எம்புரான் படத்தில் பகத் பாசில்லா? சர்ப்ரைஸ் வைத்துள்ளதா படக்குழு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எம்புரான்’ திரைப்படம், இருவரும் இணைந்து செய்கிற மூன்றாவது படமாகும். இது, மோகன்லால் நடித்த பிரபலமான ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். மார்ச் 27ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நடித்த அனுபவங்கள், மோகன்லாலை இயக்கிய அனுபவங்கள் ஆகியவற்றை மோகன்லாலும், பிரித்விராஜும் மாறி மாறி பேட்டி அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், பிரித்விராஜ், மோகன்லால், பஹத் பாசில் ஆகியோர் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படம் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியானது. இதை மோகன்லாலே வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, பஹத் பாசில், ‘எம்புரான்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், இதை சர்ப்ரைஸாக படக்குழு வைத்திருப்பதாக தகவல்கள் உலாவருகின்றன.

- Advertisement -

Read more

Local News