‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தற்போது ரசிகர்கள் மற்றும் திரைதுறையினரின் கவனம் முழுமையாக அஜித் நடிக்கவுள்ள 64-வது படத்தின் மீது திரும்பியுள்ளது. இதுகுறித்து முன்பே கருத்து தெரிவித்த அஜித், தனது 64-வது படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் துவங்கும் என்றும், படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.

இப்படத்தை ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கிறார் என்பது தற்போதுள்ள தகவல். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கதாநாயகியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்ற தகவலும் வெளியானாது.
இந்நிலையில், அஜித் நடிக்கும் இந்தப் புதிய படத்தைப் பற்றிய அப்டேட்டை அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஏ.கே 64 திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவரது பயோவில் குறிப்பிட்டுள்ளார்.