Wednesday, January 8, 2025

அஜித்தின் விடாமுயற்சி படத்தை ஜனவரி இறுதிக்குள் கொண்டுவர திட்டமா? உலாவும் புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட்பேட் அக்லி’ ஆகிய படங்களில், ‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வெளியிடப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டது. இதுவரை ‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதே சமயம், ‘குட்பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘விடாமுயற்சி’ படம் ஜனவரி மாதம் 30ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பொங்கலுக்கு வெளியான அனைத்து படங்களும் திரையரங்குகளில் ஓடி முடிந்த பிறகு, அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ மட்டும் தனியாக வெளியாவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News