2007ம் ஆண்டு மணிரத்னம் தயாரித்து இயக்கிய ‘குரு’ என்ற ஹிந்திப் படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அதே படத்தில் மாதவன், வித்யா பாலனும் சிறப்பாக நடித்திருந்தனர். இதே படத்தில் நடிக்கும் போதே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராயுக்கும் இடையே காதல் வளர்ந்து, பின்னர் திருமணம் நடந்தது.
இப்போது, கமல் நடிப்பில் ‘தக் லைப்’ படத்தை இயக்கியுள்ள மணிரத்னம், இத்திரைப்படம் திரைக்கு வந்த பின், மீண்டும் ஒரு புதிய ஹிந்திப் படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். அதிலும் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற உறுதிப்படுத்தபடாத தகவல் உலாவுகிறது.
‘தக் லைப்’ திரைக்கு வந்தபின் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.ஆனால் இது வதந்தி தான் என்று ஒரு தரப்பினர் வாதம் செய்துவருகின்றனர்.