‘ஆர்ஆர்ஆர்’ என்ற பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற திரைப்படத்திற்குப் பிறகு, ராஜமௌலி தனது அடுத்த படமாக மகேஷ்பாபுவை வைத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார். பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்தில், மகேஷ்பாபுவின் அப்பா வேடத்திற்கு விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் எனவும் ஆனால் சில காரணங்களால் விக்ரம் அந்த வேடத்தில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதையடுத்து, தற்போது மாதவன் அந்த வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவென்றால் மகேஷ்பாபுவுக்கு தற்போது 49 வயதும், மாதவனுக்கு 55 வயதும் ஆகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கென்யாவில் நடைபெறவுள்ளது. அப்போது மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் மாதவன் ஆகியோர் சேர்ந்து நடிக்கும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.