சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் பெண்களுக்கு பிடித்த ,குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால் நான் கிரிகெட் பத்து ஆண்டுகளாக விளையாடியிருக்கிறேன். எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது. அதனால் விளையாட முடியாது என்பதால் கிரிக்கெட் பார்ப்பதை தவித்தேன்.
சினிமா முயற்சி ஆறு ஆண்டுகள் தொடர் தோல்வி, நான் ஆசைப்பட்டது கிரிக்கெட் அதில் தோல்வி அழுது விட்டேன்.
அப்பா சொன்னார் யார் உனக்கு கை கொடுக்கிறார்களோ அவர்களை மறக்காதே என்றார். ’லால் சலாம்’ படத்தில் ரஜினி சாருடன் ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன். எனது ஆசை சினிமாவில் நிறைவேறிவிட்டது என்றார் விஷ்ணு விஷால்.