தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் இவானா. இவர் ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘நாச்சியார்’, ‘கள்வன்’, ‘மதிமாறன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்திலும் இவர் நடித்திருந்தார்.

தற்போது இவர் ‘சிங்கிள்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இவர் தெலுங்கு சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகமாகியுள்ளார். கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீ விஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் நடிகை இவானா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், தற்போது நான் பி.ஜி படிப்பை செய்து கொண்டிருக்கிறேன். படிப்பதுடன் சேர்ந்து சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறேன். எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலிருந்து நல்ல வாய்ப்புகள் வருகின்றன. தற்போது நடித்து வரும் ‘சிங்கிள்’ படத்திற்காக நான் தெலுங்கு மொழியைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்” என தெரிவித்தார்.